/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி அரசு மருத்துவமனைக்கு... 'தேவை அவசர சிகிச்சை'!
/
அவிநாசி அரசு மருத்துவமனைக்கு... 'தேவை அவசர சிகிச்சை'!
அவிநாசி அரசு மருத்துவமனைக்கு... 'தேவை அவசர சிகிச்சை'!
அவிநாசி அரசு மருத்துவமனைக்கு... 'தேவை அவசர சிகிச்சை'!
ADDED : செப் 27, 2024 12:29 AM

அவிநாசி : பெரும்பாலான நோயாளிகளுக்குப் பயன்தராததாகவே அவிநாசி அரசு மருத்துவமனை உள்ளது. 'வசதிகளும் இல்லை; சிகிச்சையும் இல்லை' என்பதே யதார்த்த நிலை.
சுகாதார நிலையமாக துவங்கிய அவிநாசி அரசு மருத்துவமனை பல்வேறு காலகட்டங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அவிநாசி நகரை ஒட்டியே ஆறு வழிச்சாலை அமைந்துள்ளது. அதில் மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகளில் நடக்கும் விபத்தில் சிக்கியவர்களை முதலுதவி சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தால், உயர் சிகிச்சைகள் அளிக்க எந்த வசதியும் கிடையாது என்பததே மக்களின் குற்றச்சாட்டு.
அப்படியே விபத்தில் சிக்கி அடிபட்டு வருபவர்களை பணியில் உள்ள செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர்களும், உதவியாளர்களுமே முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து விடுகின்றனர்.
மனு அளித்தும் மதிப்பில்லை
-----------------------
நல்லது நண்பர்கள் அறக்கட்டளை ரவிக்குமார் கூறியதாவது:
அவிநாசி அரசு மருத்துவமனையில் ஸ்கேனிங், எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ., சிடி ஸ்கேன் என சகல வசதிகளுடன் உயர்தரத்தில் 24 மணி நேர விபத்து கால அவசர சிகிச்சை பிரிவு வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை. இது குறித்து, மக்கள் பிரநிதிகளிடம் தொடர்ந்து மனு அளித்துள்ளோம்.
அவிநாசி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் நாள்தோறும் பணிக்கு முறையாக வர வேண்டும். எப்போதும் வெளி நோயாளிகள் பிரிவு, எக்ஸ்ரே பிரிவு ஆகியவற்றில் பல மணி நேரம் நோயாளிகள் காத்திருக்கும் நிலை உள்ளது.
இது குறித்து, அலுவலர் கண்ணன் மகாராஜிடம் கேட்கலாம் என சென்றால்,.'அவர் விடுப்பில் சென்றுள்ளார்,' என்ற பதிலே வருகிறது. அவரை போனிலும் தொடர்பு கொள்ள முடிவதில்லை.
இருள் மண்டிய வளாகம்
--------------------
மருத்துவமனை வளாகம் முழுவதுமாக மாலை நேரங்களில் இருள் மண்டி கிடைக்கிறது. தற்போது தாய் சேய் நல பிரிவு கட்டடப் பணிக்காக மருத்துவமனையில் வடக்கு பகுதியில் உள்ள சுவற்றை இடித்து உள்ளனர். இதனால் தினந்தோறும் சமூக விரோத செயல்கள் மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுவதாக அருகில் வசிப்போர் குற்றம்சாட்டுகின்றனர்.
பெண்கள் வார்டு பகுதி, அவசர சிகிச்சை பிரிவு பகுதி ஆகியவற்றின் முன் உள்ள உயர் கோபுர விளக்குகள் மூன்று மாதமாக எரிவதில்லை. நீலகிரி எம்.பி., ராஜா தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் வாங்கி கொடுத்த ஜெனரேட்டரை அவசர காலத் தேவைகளுக்கு கூட உபயோகப்படுத்துவதில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.