அச்சம் தவிர்த்து, உயிரைத் துச்சமாக நினைத்து இன்னுயிர்களை மீட்பவர்கள் தீயணைப்புத்துறையினர்.
திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையை உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ் நம்முடன் பகிர்ந்தவை:
உயிரை துச்சமாக நினைத்து, ஆபத்தில் இருப்பவரை பத்திரமாக மீட்கும் போது, ஒரு விதமான பணி திருப்தி உள்ளது.
பெரிய கல்குவாரியில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, பாறை சரிந்து விழுந்து, வழி மறைத்து விட்டது. அதில், எட்டு பேர் சிக்கி கொண்டனர்.
தகவலறிந்து சென்ற நாங்கள் விரைந்து, இருவரை உயிருடன் மீட்டோம். மீதமுள்ள, ஆறு பேர் உள்ளே சிக்கி கொண்டனர். வழிதடத்தை, ஒரு டன் முதல், அரை டன் வரை எடையுள்ள பெரிய பாறைகள் மறைத்துக்கொண்டன.
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உடன் சேர்ந்து, எட்டு நாள் போராடி, ஆறு பேரின் சடலத்தை மட்டுமே மீட்க முடிந்தது. இதுபோன்று பல மீட்பு பணிகளிலும் அச்சத்தை துறந்து, களத்தில் பணியாற்றுவது தீயணைப்பு வீரர்கள் தான்.

