/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊத்துக்குளி ரோட்டில் 'ஒயர்' சேதம் தவிர்ப்பு
/
ஊத்துக்குளி ரோட்டில் 'ஒயர்' சேதம் தவிர்ப்பு
ADDED : ஜன 09, 2024 12:46 AM
திருப்பூர்;திருப்பூர் - ஊத்துக்குளி இடைபட்ட முகப்பு சாலை புதுப்பிப்பு பணி முடிந்துள்ள நிலையில், ரோட்டின் மையப்பகுதியில் இருந்த மின் கம்பங்களுக்கான ஒயர், சேதமடைந்து வந்தது; தினமலர் செய்தி எதிரொலியால், ஒழுங்குப்படுத்தப்பட்டது.திருப்பூர் - ஊத்துக்குளி சாலையின் ஒரு பகுதி, விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதுப்பிக்கப்பட்டது. ரோட்டின் மையப்பகுதியில், மையத்தடுப்புகளும், அதன் இடையே, தெரு விளக்குகளும் பொருத்தப்பட்டிருந்தன.
சாலை புதுப்பிப்பு பணிக்காக, மையத்தடுப்புகள் அகற்றப்பட்ட நிலையில், மின் கம்பங்களுக்கான ஒயர் மீது, வாகனங்கள் ஏறி இறங்கி சென்றதால், அவை சேதமடைந்தன.
இதுதொடர்பான செய்தி, நம் நாளிதழில் வெளியான நிலையில், நேற்று முன்தினம் இரவு, சாலையின் நடுவே மையத்தடுப்பு வைக்கப்பட்டு, சிதறிக்கிடந்த 'ஒயர்' ஒழுங்குப்படுத்தப்பட்டது.