/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏ.வி.பி. - மைக்ரோ கிட்ஸ் அணி மாநில கால்பந்து போட்டிக்கு தகுதி
/
ஏ.வி.பி. - மைக்ரோ கிட்ஸ் அணி மாநில கால்பந்து போட்டிக்கு தகுதி
ஏ.வி.பி. - மைக்ரோ கிட்ஸ் அணி மாநில கால்பந்து போட்டிக்கு தகுதி
ஏ.வி.பி. - மைக்ரோ கிட்ஸ் அணி மாநில கால்பந்து போட்டிக்கு தகுதி
ADDED : நவ 08, 2025 12:56 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கால்பந்து போட்டியில், 14 வயது மாணவியர் பிரிவில், மைக்ரோ கிட்ஸ் பள்ளி அணி, மாணவர் பிரிவில் காந்தி நகர் ஏ.வி.பி. பள்ளி அணிகள் வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தேர்வாகின.
பள்ளி அணிகளுக்கான மாவட்ட கால்பந்து போட்டி நடந்து வருகிறது. திருப்பூர், கே.செட்டிபாளையம், விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 14 வயது மாணவியர் கால்பந்து போட்டியும், நஞ்சப்பா பள்ளியில், பதிநான்கு வயது மாணவர் கால்பந்து போட்டியும் நேற்று நடந்தது.
மாணவியர் பிரிவு இறுதி போட்டியில், கணியாம்பூண்டி மைக்ரோ கிட்ஸ் பள்ளி அணி, உடுமலை, என்.வி., மெட்ரிக் பள்ளி அணி மோதியது. இதில், 4 - 0 என்ற கோல் கணக்கில் மைக்ரோ கிட்ஸ்அணி வெற்றி பெற்றது.
டை பிரேக்கர் பரபரப்பு மாவட்ட போட்டியில் வெற்றி பெற்றால், மாநில கால்பந்து போட்டிக்கு செல்ல முடியும் என்பதால், 14 வயது மாணவர் கால்பந்து போட்டி துவக்கம் முதலே பரபரப்பாக இருந்தது. ஏ.வி.பி., காந்தி நகர் - இடுவம்பாளையம் பிளாட்டோஸ் இரு அணிகளும், ஆட்டத்தின் முதல் பாதி வரை தடுப்பு ஆட்டம் ஆடினர்.
நிறைவில் 0 - 0 என கோல் எதுவுமில்லாமல், ஆட்டம் சமநிலைக்கு வந்தது.வெற்றியை தீர்மானிக்க டை பிரேக்கரில் கூடுதல் நேரம் (15 நிமிடம்) நடுவர்களால் ஒதுக்கப்பட்டது.
அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அணி, 5 - 3 என்ற கோல் கணக்கில், இடுவம்பாளையம் பிளோட்டோஸ் பள்ளி அணியை வென்றது; இறுதி வரை போராடிய பிளாட்டோஸ் அணி மூன்று கோல் அடித்து, பாராட்டு பெற்றது.

