/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 08, 2025 12:56 AM

அவிநாசி: அவிநாசி, சேவூர் ரோட்டில் குலாலர் திருமண மண்டபம் அருகில் திருப்பூர் மாவட்ட ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளை தலைவர் நாசர்அலி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மோகன், பொதுச்செயலாளர் ரவி, இ.கம்யூ., ஒன்றிய செயலாளர் முத்துசாமி, பொருளாளர் செல்வராஜ், செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர்.
அவிநாசியில் உள்ள சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் வணிகச் சான்று வழங்க வேண்டும். அவிநாசி நகராட்சி முழுவதும் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு முறையாக தகவல் தெரிவித்து 2014ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டப்படி வணிகக் குழு (வெண்டிங் கமிட்டி) தேர்தலை முறையாக நடத்த வேண்டும்.
சட்ட நெறிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகக் கூறி, அவிநாசி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

