/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏ.வி.பி., பள்ளியில் பரிசளிப்பு விழா
/
ஏ.வி.பி., பள்ளியில் பரிசளிப்பு விழா
ADDED : பிப் 16, 2025 02:43 AM

திருப்பூர்: திருப்பூர், காந்திநகர், ஏ.வி.பி., டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி (சி.பி.எஸ்.இ.,) பள்ளியில், 14ம் ஆண்டு பரிசளிப்பு விழா, ஏ.வி.பி., கல்விக் குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமையில் நடந்தது.
ஏ.வி.பி., கல்வி குழுமங்களின் பொருளாளர் லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ராஜேஷ் வரவேற்றார். சத்தியமங்கலம் லீலா கண் மருத்துவமனை நிறுவனத்தலைவர் உத்தமராஜ், திருப்பூர் சரவணா கார்மென்ட்ஸ் நிறுவனத் தலைவர் ரவீந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 'வெற்றியின் ஊக்கமே பரிசு' எனும் தலைப்பில் பேசினர். பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சத்தியமங்கலம், ஸ்ரீ சுந்தர் மஹால் உரிமையாளர் சுந்தரம், கந்தசாமி, ஆர்.டி.ஆர்., ஜூவல்லரியின் உரிமையாளர் ரமேஷ் ஆகியோர் மழலையர் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரை கல்வி, விளையாட்டு, பல்வேறு மன்றச் செயல்பாடுகள், ஐ.ஐ.டி., ஒலிம்பியாடு, வி.வி.எம்., 100 சதவீத வருகைப்பதிவு போன்ற பல்வேறு விதமான செயல்களில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.
கல்வியாண்டில் (2024 - 25) சிறப்பாக செயல்பட்ட டாபோடில்ஸ் அணி, விளையாட்டில் சிறப்பாக செயல்பட்ட ப்ளூபெல்ஸ் அணி, பாட இணை செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட ஜீனியா அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. பள்ளி கலைநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா நன்றி கூறினார்.

