/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏ.வி.பி. பள்ளி மாணவர்களிடம் 400 கிலோ மின் கழிவு சேகரிப்பு
/
ஏ.வி.பி. பள்ளி மாணவர்களிடம் 400 கிலோ மின் கழிவு சேகரிப்பு
ஏ.வி.பி. பள்ளி மாணவர்களிடம் 400 கிலோ மின் கழிவு சேகரிப்பு
ஏ.வி.பி. பள்ளி மாணவர்களிடம் 400 கிலோ மின் கழிவு சேகரிப்பு
ADDED : நவ 23, 2025 04:43 AM

திருப்பூர்: ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுன், திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளியின் இன்ட்ராக்ட் கிளப் ஆகியன இணைந்து டிரைடெக் சிஸ்டம் நிறுவனத்திடம் மாணவர்களின் வீடுகளில் பயனற்று இருக்கும் மின் கழிவுகளை சேகரித்து வழங்கும் நிகழ்ச்சி, ஏ.வி.பி. பள்ளியில் நடந்தது.
தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ரோட்டரி தலைவர் பூபதி வரவேற்றார். ரோட்டரி மாவட்ட கவர்னர் தனசேகருடன் இணைந்து உறுப்பினர்கள் குத்துவிளக்கேற்றினர்.
கவுரவ விருந்தினர்களாக ரோட்டேரியன்கள் சிவபிரகாஷ், லோகநாதன், எழில்வண்ணன், ஆறுமுகம், மெய்நம்பி, வேலுசாமி, சண்முகசுந்தரம், சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.
மின் கழிவுகள் 400 கிலோ சேகரிக்கப்பட்டது. மின் கழிவுகள் காற்று, மண்ணை மாசுபடுத்துவதோடு, மனிதர்கள், உயிரினங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்று மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.