/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முத்துார் விவேகானந்தா வித்யாலயா மழலையர் விளையாட்டு விழா
/
முத்துார் விவேகானந்தா வித்யாலயா மழலையர் விளையாட்டு விழா
முத்துார் விவேகானந்தா வித்யாலயா மழலையர் விளையாட்டு விழா
முத்துார் விவேகானந்தா வித்யாலயா மழலையர் விளையாட்டு விழா
ADDED : நவ 23, 2025 04:44 AM

திருப்பூர்: முத்துார் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையருக்கான விளையாட்டு விழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாலசுப்ரமணியம் தேசிய கொடியேற்றினார். மாணவ, மாணவியர் ஒலிம்பிக் ஜோதி ஏந்திவந்து சிறப்பு விருந்தினரிடம் அளித்து சமாதான புறா பறக்கவிட்டனர்.
தலைமையாசிரியை சாந்தா வரவேற்றார். தாளாளர் சண்முகம் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்தார்; செயலாளர் சக்திவேல் நினைவுப்பரிசு வழங்கினார். நிர்வாக இயக்குனர் அசோக்குமார், முதல்வர் நடராஜ் முன்னிலை வகித்தனர்.
மழலையரின் உடற்பயிற்சிகள், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை சரண்யா நன்றி கூறினார்.