ADDED : ஆக 19, 2024 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒலி - ஒளி அமைப்பு, மேடை அலங்காரம், பந்தல் உள்ளிட்டவை அமைக்கும் அமைப்பாளர்களின் கூட்டமைப்பு தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன். இதன் திருப்பூர் மாநகர கிளை சார்பில், முப்பெரும் விழா ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது. மாநில தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.
பொது செயலாளர் மணிமாறன், பொருளாளர் பால்ராஜ் முன்னிலை வகித்தனர். மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வனத்திற்குள் திருப்பூர், துப்புரவாளன் அமைப்பு, இனி ஒருவிதி செய்வோம், வேர்கள், அக் ஷய பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளுக்கும், சமூக செயற்பாட்டாளர்களுக்கும் விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

