ADDED : செப் 06, 2025 06:44 AM
திருப்பூர்; தமிழக முதல்வரின் சிறந்த போலீஸ் ஸ்டேஷனுக்கான, 2023ம் ஆண்டுக்கான விருதுக்கு 49 போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டன.
இதில், திருப்பூர், மதுரை மற்றும் திருத்தணி ஆகிய பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட மூன்று போலீஸ் ஸ்டேஷன்களுக்கு கடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அதற்கான விருதுகளை வழங்கினார்.
மீதமுள்ள 46 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இந்த விருதுகளை தமிழக டி.ஜி.பி., இன்று சென்னையில் வழங்கவுள்ளார். தமிழக காவல் துறை தினம் கொண்டாடப்படும் நிலையில், காவல் துறை முதன்மை அலுவலக கூட்டரங்கில், இன்று காலை 10:00 மணிக்கு இந்தவிருதுகள் வழங்கப்படவுள்ளன.
இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலை போலீஸ் ஸ்டேஷனுக்கு சிறந்த போலீஸ் ஸ்டேஷனுக்கான முதல்வர் விருது வழங்கப்படுகிறது.
கோவை காட்டூர் சி-1 ஸ்டேஷன், மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன், ஊட்டி டவுன் சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷன் ஆகியனவும் இந்த விருதினைப் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளது.