/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா
/
ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா
ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா
ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா
ADDED : மார் 05, 2024 01:00 AM

திருப்பூர்;திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா நடந்தது.
நடப்பு கல்வியாண்டில் (2023-24) கல்வி, விளையாட்டு என, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், விருதுகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு, பல்லடம், ரோட்டரி பள்ளி தாளாளர் மார்ட்டின், 'இமைகள்' கண் பவுண்டேஷன் நிறுவனர் சுந்தரராஜன், பல்லடம், பிரனவ் சர்வதேச பப்ளிக் பள்ளி தாளாளர் பிரகாஷ், ரோட்டரி துணை ஆளுநர் கவிதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா, பள்ளி முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் பங்கேற்றனர்.