/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆட்டிசம் குறித்து விழிப்புணர்வு
/
ஆட்டிசம் குறித்து விழிப்புணர்வு
ADDED : ஏப் 04, 2025 03:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில், ஆட்டிசம் நாளை முன்னிட்டு, 'குரு மடி' என்ற ஆட்டிசம் சிறப்பு பள்ளியில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அப்பள்ளியில் பயிலும் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், அரசு பள்ளி மாணவர்களையும் அழைத்து கொண்டு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதில், ஆட்டிசம் குறித்தும், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் மகத்தான சேவை குறித்து விளக்கப்பட்டது.
தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு பரிசும், குழந்தைகளுக்கு பழங்களும் கொடுக்கப்பட்டது. திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

