/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
/
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : டிச 05, 2025 08:37 AM

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவிநாசி தாலுகா அலுவலகத்தில் கோலங்கள் வரையப்பட்டன. பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
திருமுருகன்பூண்டி நகராட்சியில் அலுவலகம் முன்பு, பி.எல்.ஓ.,க்கள், மகளிர் சுய உதவிக் குழுவினருடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் வரை மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மகளிர் திட்ட இணை இயக்குனர் சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் துணை ஆட்சியர் கல்பனா, திருமுருகன்பூண்டி நகராட்சி சமூக நல அலுவலர் துர்கா தேவி, அவிநாசி தாசில்தார் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

