/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடையில் தண்ணீர் சிக்கனம் ஊராட்சிகளில் விழிப்புணர்வு
/
கோடையில் தண்ணீர் சிக்கனம் ஊராட்சிகளில் விழிப்புணர்வு
கோடையில் தண்ணீர் சிக்கனம் ஊராட்சிகளில் விழிப்புணர்வு
கோடையில் தண்ணீர் சிக்கனம் ஊராட்சிகளில் விழிப்புணர்வு
ADDED : ஏப் 10, 2025 10:17 PM
உடுமலை, ; கோடை காலம் துவங்கிவிட்டதால், குடிநீர் தட்டுபாட்டை சமாளிக்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ஒன்றிய அலுவலகங்களுக்கு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என, பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற அறிவித்துள்ளது.
குடிநீர் குழாய் உடைப்புகளுக்கு உடனடியாக தீர்வு நடவடிக்கை மேற்கொள்வது, குடிநீர் குறைபாடு குறித்து புகார் தெரிவிக்க, குடிநீர் கட்டுப்பாட்டு அறைகளும் ஒன்றிய அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
குடிநீர் தட்டுபாட்டை தவிர்க்க, அரசு துறைகள் மட்டுமின்றி, மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென ஊராட்சி நிர்வாகத்தினர் கிராமங்களில், மகளிர் சுய உதவிக்குழுவினர் வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
ஊராட்சி நிர்வாக அலுவலர்கள் கூறியதாவது: குடிநீரை அந்த தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தண்ணீரை வீணாக்காமல் பிடித்து வைப்பதும், கோடை காலங்களில் சிக்கனமாக செலவிடுவதும் பொதுமக்களிடம் தான் உள்ளது.
மேலும், 90 சதவீதம், குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள, 10 சதவீதத்தை மக்கள் தெளிவுபடுத்தி, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

