/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் நுகர்வோருக்கு விழிப்புணர்வு அவசியம்
/
மின் நுகர்வோருக்கு விழிப்புணர்வு அவசியம்
ADDED : அக் 18, 2024 06:35 AM
திருப்பூர் : திருப்பூர் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. 'கன்ஸ்யூமர் அவேர்னஸ் விங்' நிர்வாகி ரவி கொடுத்த மனு:
மின்கம்பங்கள் அருகே, மழைக்காலங்களில், மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது; பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை வேகமாக முடிக்க வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சியின், இடுவம்பாளையம் பகுதியில், வீடு, கடை இணைந்துள்ள பகுதிகளில், மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனர். மின்கம்பங்களில், அத்துமீறி, தனியார் கேபிள்கள் கட்டி இழுக்கப்படுகின்றன. மின்வாரிய ஊழியர்களும் கண்டுகொள்வதில்லை.
குப்பாண்டம்பாளையம் பகுதியில் உள்ள சில வீடுகளில், மின்சாதன பொருட்களில் 'எர்த்' அடிப்பதாக கூறியுள்ளனர்; சரிசெய்ய வேண்டும். முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.