ADDED : பிப் 10, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழிலாளர் துறை அறிவுறுத்தலின்படி, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி நேற்று ஏற்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில், பல்வேறு அரசுத்துறையினர் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, டி.ஆர்.ஓ., ஜெய்பீம் துவக்கி வைத்தார். அவிநாசி அரசு கலைக்கல்லுாரியில், விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தொழிலாளர் துறை உதவி கமிஷனர் ஜெயக்குமார், துவக்கி வைத்தார். 'விழுதுகள்' அமைப்பினரும், தொழிலாளர் துறை அலுவலர்களும் பேசினர். பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.