ADDED : அக் 18, 2024 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் : கோவை புற்றுநோய் அமைப்புடன் கோடங்கிபாளையம் ஊராட்சி, பல்லடம் ஊராட்சி ஒன்றியம் ஆகியன இணைந்து, உலக ஆதரவு சிகிச்சை தினம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, காரணம்பேட்டையில் நேற்று நடந்தது.
ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி, மண்டல துணை பி.டி.ஓ., விஜயா, துணை பி.டி.ஓ., இந்திராணி, காரணம்பேட்டை கனரா வங்கி தலைமை மேலாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை புற்றுநோய் அமைப்பின் தலைமை ஆலோசகர் சரஸ்வதி, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர்கள் பத்மாவதி, மரகதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.