/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு
/
மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜன 22, 2024 12:44 AM

பல்லடம்;பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில், 'நமது லட்சியம் வளர்ச்சி... அடைந்த பாரதம்' எனும் நிகழ்ச்சி பல்லடம் அருகே பருவாய் கிராமத்தில் நடந்தது.
வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப திட்ட அலுவலர் மாணிக்கவல்லி தலைமை வகித்தார். முன்னதாக, கொச்சின் சிறப்பு பொருளாதார மண்டல வளர்ச்சி ஆணையர் ஹேமலதா, 'ஆயுஷ்மான்' மருத்துவ காப்பீடு அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
பேராசிரியர் கலையரசன், தேனி மற்றும் காளான் வளர்ப்பு பயிற்சிகள் குறித்தும், பேராசிரியர் சுதாகர் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்தும் விளக்கினர். வங்கி அலுவலர்கள் குமரகுருபரு, தினேஷ்குமார், மகேந்தர் ஆகியோர் வங்கி வாயிலாக வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்து விளக்கினர். அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் காவியாஸ்ரீ, சுகாதார ஆய்வாளர் அஜித்குமார், தபால் துறை கிளை மேலாளர் கோகிலவாணி உட்பட பலர் பங்கேற்றனர்.