/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கள்ளச்சாராயத்துக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்
/
கள்ளச்சாராயத்துக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : பிப் 17, 2025 11:37 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
கலெக்டர் கிறிஸ்துராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். மகளிர் திட்ட இயக்குனர் சாம் சாந்தகுமார், 'டாஸ்மாக்' மாவட்ட மேலாளர் பண்டரிநாதன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். கரகாட்ட கலைஞர்களின் மேளதாள நடனத்துடன், எல்.ஆர்.ஜி., கல்லுாரி மாணவியர், 'கள்ளச்சாராயத்தால் சாவு நிச்சயம்', உட்பட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். கலெக்டர் அலுவலக வளாகம் முதல் தென்னம்பாளையம் வரை ஊர்வலமாக சென்று, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.