/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிக்கண்ணா கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
சிக்கண்ணா கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
சிக்கண்ணா கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
சிக்கண்ணா கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : நவ 12, 2025 11:38 PM

திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 சார்பில் கல்லுாரி வளாகத்தில் உள்ள கலாம் கனவு பூங்காவில் பறவை மனிதர் சலீம் அலி பிறந்தநாளை முன்னிட்டு நேற்று விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாணவ பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
என்.எஸ்.எஸ். அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் பேசியதாவது:
இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி, முறையான பறவை கணக்கெடுப்பை நாடு முழுதும் நடத்திய முதல் இந்தியர். பறவைகள் இல்லையேல் மனிதர்கள் இல்லை. பறவைகள் தங்கள் எச்சத்தின் வாயிலாக காடுகளை உருவாக்கி பல உயிர்களை பாதுகாக்கின்றன. பறவைகள் விளைச்சலை பாதிக்கும் பூச்சிகளை உண்டு பயிரின் மகசூலை அதிகரிக்கின்றன. எனவே நாம் அனைவரும் பறவைகளை நேசித்து அவைகளை பாதுகாக்கும் முயற்சிகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாணவ செயலர்கள் செர்லின், ரேவதி, நவீன்குமார், பிரவீன் ஆகியோர் தலைமையில் கல்லுாரி வளாகத்தில் பறவை நோக்கலில் ஈடுபட்டனர். பின், பறவைகளை நேசிப்போம், பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர்.

