/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சத்துக்கான 'நுழைவாயில்'; நுகர்வோர் அமைப்பு எதிர்ப்பு
/
புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சத்துக்கான 'நுழைவாயில்'; நுகர்வோர் அமைப்பு எதிர்ப்பு
புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சத்துக்கான 'நுழைவாயில்'; நுகர்வோர் அமைப்பு எதிர்ப்பு
புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சத்துக்கான 'நுழைவாயில்'; நுகர்வோர் அமைப்பு எதிர்ப்பு
ADDED : நவ 12, 2025 11:38 PM
திருப்பூர்: லஞ்சம் அதிகரிக்கும் என்பதால், புதிய மின் இணைப்பு வழங்க, ஒயரிங் பணி ஒப்பந்ததாரரிடம் சோதனை அறிக்கை பெறும் உத்தரவை, முழுமையாக தடை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதிய மின் இணைப்பு பெறும் சேவை, 2016ம் ஆண்டு முதல் 'ஆன்லைன்' மயமாக்கப்பட்டது. அதன்படி, கட்டடத்துக்கு புதிய மின் இணைப்பு வாங்குவோர், பத்திர நகல், பட்டா நகல், சொத்துவரி, ஆதார், போட்டோ ஆகிய விவரங்களை கொண்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டது. மின் இணைப்பு பெறுவதற்கான 'டிபாசிட்' தொகையும், ஆன்லைன் மூலமாக செலுத்தும் வசதியும் வந்துள்ளது.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் வரும் வரை, தரமான மின்சாதன பொருட்கள், ஒயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, ஒயரிங் ஒப்பந்தாரர் ஒருவரின் சான்றொப்பமும் தேவைப்பட்டது. ஆன்லைன் வந்த பிறகு, உரிமையாளரே, இதுதொடர்பான உறுதிமொழி பத்திரத்தை சமர்ப்பக்க வழிவகை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், மின்சார ஒழுங்குமுறை ஆணையம், ஒயரிங் ஒப்பந்தாரரின் சான்றொப்பம் அவசியம் இணைக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதாவது, மின் இணைப்பு வேண்டுவோர், மின் இணைப்ப கோரி, வழக்கம் போல் ஆன்லைனின் விண்ணப்பம் செய்த பிறகு, ஒயரிங் ஒப்பந்ததாரர் அறிக்கைக்காக, நேரில் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய அறிவிப்புக்கு, பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மக்கள் அதிருப்தி
--------------
திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க நிர்வாகி சரவணன், மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவருக்கு அனுப்பியுள்ள மனு:
அங்கீகரிக்கப்பட்ட ஒயரிங் ஒப்பந்ததாரரின் சான்றொப்பம் பெற வேண்டும் என்ற உத்தரவால், மின்இணைப்பு வழங்கும் பணி முடங்கியுள்ளது. ஆன்லைனில், அதற்கான வசதி இல்லை. ஆன்லைனின் விண்ணப்பித்த பிறகு, தனிநபர் கையெழுத்துக்காக அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். லஞ்சம் அதிகரிக்கும் என்பதால், ஒயரிங் ஒப்பந்ததாரர் சான்றொப்பம் பெறும் உத்தரவை, முழுமையாக தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

