/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
4 சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை
/
4 சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை
4 சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை
4 சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை
ADDED : நவ 12, 2025 11:39 PM

பல்லடம்: பல்லடத்தில், நான்கு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு, இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
பல்லடம் இமைகள் ரோட்டரி சங்கம், சுல்தான்பேட்டை வின்ட் சிட்டி ரோட்டரி சங்கம், பல்லடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்த இலவச மருத்துவ பரிசோதனை முகாம், பல்லடம்- பொள்ளாச்சி ரோட்டில் நடந்தது. போக்குவரத்து எஸ்.ஐ. பார்த்திபன் முகாமை துவக்கி வைத்து, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் சுந்தர்ராஜ், கனகராஜ், நாராயணசாமி, பாரதி மெட்ரிக் பள்ளி தாளாளர் தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, பொள்ளாச்சி ரோடு வழியாக சென்ற கன்டெய்னர்கள், லாரி, வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள், உதவியாளர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை ஆகியவை பரிசோதிக்கப்பட்டு, உரிய அறிவுரை வழங்கப்பட்டது.

