ADDED : ஜூன் 25, 2026 03:17 AM
அ நிறம் | அளவு
பொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியம், பொல்லிக் காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் குணசேகரன் வரவேற்றார். மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் நடந்தது. போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராஜேந்திரன், போதைப்பொருள் ஒழிப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் பரந்தாமன், டாக்டர் சவுமியா, எஸ்.ஐ., சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியை மதினா பேகம் நன்றி கூறினார்.
