/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அய்யா வைகுண்டர் அவமதிப்பு; போராட்டம் நடத்த திட்டம்
/
அய்யா வைகுண்டர் அவமதிப்பு; போராட்டம் நடத்த திட்டம்
அய்யா வைகுண்டர் அவமதிப்பு; போராட்டம் நடத்த திட்டம்
அய்யா வைகுண்டர் அவமதிப்பு; போராட்டம் நடத்த திட்டம்
ADDED : செப் 04, 2025 11:53 PM
திருப்பூர்; காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவர் பூமிநாதன் அறிக்கை:
குறிப்பிட்ட ஜாதியினர் மேலாடை அணிந்தால் வரி விதிக்கப்பட்ட போது அதை எதிர்த்து போராடியவர் அய்யா வைகுண்டர். திருச்செந்துாரில் ஜீவ சமாதி அடைந்த அவரை பெருமளவு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.,) சார்பில் நடந்த இளநிலை உதவி வரைவாளர் பணிக்கான தேர்வில் அவரை, முடி வெட்டும் கடவுள் என்ற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரை அவமதிக்கவே இதைச் செய்துள்ளதாக சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது. இது, அவரது பக்தர்களை மனம் நோகச் செய்துள்ளது.
இந்த தவறு நேர்ந்ததற்கு பொறுப்பான அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை தாமதமாகும் நிலையில் அவரது பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.