/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலபவன் குளோபல் பள்ளி மாணவ - மாணவியர் அபாரம்
/
பாலபவன் குளோபல் பள்ளி மாணவ - மாணவியர் அபாரம்
ADDED : செப் 04, 2025 11:53 PM

திருப்பூர்; சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில் நடந்த, திருப்பூர் தெற்கு குறுமைய விளையாட்டுப்போட்டிகளில், பாலபவன் குளோபல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் அபார வெற்றி பெற்றனர்.
14 வயதினர் பிரிவில் 400 மீட்டர், 200 மீட்டர் தடையோட்டத்தில் தன்ஷிகா முதலிடம், 800 மீட்டரில் இரண்டாமிடம்; சிலம்பத்தில் சஞ்சனா முதலிடம்; 17 வயதினர் பிரிவில், தடை தாண்டும் ஓட்டத்தில் அபிநவ் கிருஷ்ணா முதலிடம், 400 மீ., தடையோட்டத்தில் இரண்டாம் இடம், 200 மீட்டரில் மூன்றாம் இடம்; செஸ் போட்டியில் தீபிகா மூன்றாமிடம் பிடித்தனர்.
19 வயதினர் பிரிவில் செஸ் போட்டியில் மதுமதி முதலிடம்; சிலம்பத்தில் சக்தி முகிலன் முதலிடம்; வினயா முதலிடம்; கனிமொழி இரண்டாம் இடம்; தட்டு எறிதல் போட்டியில் ரஞ்சித்குமார் மூன்றாமிடம், 100 மீ., தடகளத்தில் அப்துல் ரகுமான் மூன்றாம் இடம்; மும்முறை தாண்டுதலில் வினயா மூன்றாம் இடம் பெற்றனர். இவர்களையும், பயிற்சியளித்த உடற்பயிற்சி ஆசிரியரையும் பள்ளி தாளாளர் மாலதி முத்துரத்தினம், செயலாளர் சக்தி மிருதுளா ஆகியோர் வாழ்த்தினர்.