/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., கால்வாய்கள் துார்வாரும் பணி; ஊரக வேலை உறுதி திட்டத்தில் தீவிரம்
/
பி.ஏ.பி., கால்வாய்கள் துார்வாரும் பணி; ஊரக வேலை உறுதி திட்டத்தில் தீவிரம்
பி.ஏ.பி., கால்வாய்கள் துார்வாரும் பணி; ஊரக வேலை உறுதி திட்டத்தில் தீவிரம்
பி.ஏ.பி., கால்வாய்கள் துார்வாரும் பணி; ஊரக வேலை உறுதி திட்டத்தில் தீவிரம்
ADDED : செப் 25, 2024 08:33 PM

உடுமலை : பி.ஏ.பி., கிளைக்கால்வாய்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பராமரிக்கும் பணி நடந்து வருகிறது.
பி.ஏ.பி., பாசனத்தின் கீழ், இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தற்போது நீர் வழங்கப்பட்டு வருகிறது. பிரதான கால்வாய் வழியாக நீர் வழங்கப்படும் நிலையில், மடைகள் வாயிலாக, விவசாய நிலங்களுக்கு நீர் செல்லும் வகையில், பல கி.மீ.,துாரத்திற்கு கால்வாய்கள் அமைந்துள்ளன.
மண் கால்வாய்களாக உள்ள நிலையில், இக்கால்வாய்களில், இரு ஆண்டுக்கு ஒரு முறை ஆறு மாதத்திற்கு நீர் வழங்கப்படுகிறது. இதனால், கால்வாய்கள் புதர் மண்டியும், மண் சரிந்து அடையாளத்தை இழந்தும் காணப்படுகின்றன.
நீர் வளத்துறை மற்றும் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு போதிய நிதி வசதி இல்லாத நிலையில், ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களை கொண்டு கால்வாய்களை துார்வார வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர்.
அதன் அடிப்படையில், இரண்டாம் மண்டல பாசன கால்வாய்களில், தண்ணீர் திறப்புக்கு முன் துார்வாரும் பணி நடந்தது. தற்போது, அடுத்து துவங்க உள்ள மூன்றாம் மண்டல பாசன பகுதிகளிலும், ஒரு சில கால்வாய்கள் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
அதிகாரிகள் கூறியதாவது: பி.ஏ.பி., கால்வாய்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவு அடிப்படையில், திட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது.
இத்திட்ட பணிகளில் நிலுவை உள்ள பகுதிகள் மற்றும் மூன்றாம் மண்டல பாசனத்தின் கீழ் பயன்பெறும் பகுதிகளிலுள்ள கால்வாய்களும், சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட திட்ட அனுமதி மற்றும் தொழிலாளர்கள் வேலை நாட்கள் அடிப்படையில் பணி நடந்து வருகிறது. இவ்வாறு, தெரிவித்தனர்.