ADDED : ஆக 08, 2025 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:உடுமலை அருகே, காண்டூர் கால்வாயில், நேற்று முன்தினம் இரவு, 1 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று, தண்ணீர் குடிக்க வரும் போது தவறி விழுந்துள்ளது.
நீரில் அடித்து வரப்பட்ட யானைக்குட்டி, திருமூர்த்தி அணையில் மிதந்தது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு சென்று, யானைக்குட்டி சடலத்தை மீட்டு, அங்கேயே பிரேத பரிசோதனை செய்து, பாதுகாப்பாக புதைத்தனர். கடந்த மாதமும் ஒரு யானை இதே போல, இறந்தது.