/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சத்திரம் வீதியில் துர்நாற்றம் நோய் பரவும் அபாயம்
/
சத்திரம் வீதியில் துர்நாற்றம் நோய் பரவும் அபாயம்
ADDED : ஏப் 14, 2025 04:30 AM

உடுமலை : கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடி, கழிவுகளும் குவிந்து கிடப்பதால், சத்திரம் வீதியில் நோய் பரவும் அபாயம் நிலவுவதால், மக்கள் வேதனையில் உள்ளனர்.
உடுமலை நகராட்சிக்குட்பட்ட சத்திரம் வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ளது. இந்த வீதியில் அதிகளவு கடைகள், வணிக நிறுவனங்கள், அரசுப்பள்ளி மற்றும் குடியிருப்புகளும் உள்ளன. அதிக மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த வீதியில் திறந்தவெளி சாக்கடை முறையாக துார்வாரப்படுவதில்லை. நீண்ட நாட்களாக, சாக்கடையில் கழிவு நீர் தேங்கியிருப்பதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
முழுமையாக துார்வாராமல், சாக்கடையில் உள்ள கழிவுகளை அள்ளி திறந்தவெளியில் வீசியுள்ளனர். அழுகிய காய்கறிகள் மற்றும் இதர கழிவுகள் திறந்தவெளியில் கிடப்பதால், துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. அருகிலேயே அரசுப்பள்ளியும் இருப்பதால், மாணவ, மாணவியரும் பாதிக்கும் நிலை உள்ளது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடு குறித்து, நகராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மக்கள் வேதனையில் உள்ளனர்.

