/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் கட்டணம் கூடுதல் வசூல் பணிக்கம்பட்டியில் 'பகீர்' புகார்
/
குடிநீர் கட்டணம் கூடுதல் வசூல் பணிக்கம்பட்டியில் 'பகீர்' புகார்
குடிநீர் கட்டணம் கூடுதல் வசூல் பணிக்கம்பட்டியில் 'பகீர்' புகார்
குடிநீர் கட்டணம் கூடுதல் வசூல் பணிக்கம்பட்டியில் 'பகீர்' புகார்
ADDED : அக் 12, 2025 12:24 AM

பல்லடம் ஒன்றியம், பணிக்கம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில், கிராமசபா கூட்டம் நேற்று நடந்தது.
பொதுமக்கள் கூறுகையில், 'ஊராட்சி முழுவதும், பொதுமக்களிடம், 100 ரூபாய் குடிநீர் கட்டணத்துக்கு பதிலாக, 120 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அதுவும், 6 மாதம், அட்டை போட்டு இதேபோன்று வசூல் செய்துள்ளனர். புகார் அளித்தாலும் நடவடிக்கை இல்லை.
குடிநீர் கட்டணத்தை ஆன்லைனில் கட்டுமாறு கூறுகிறீர்கள். எனில், கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகைக்கு யார் பொறுப்பேற்பது?,' என்றனர்.
'தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு, குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு குறைத்து வழங்குவதாகவும், பிரதமர் மோடிதான் இதற்கு காரணம் என்றும் அவதுாறு பரப்பப்படுகிறது,' என, பா.ஜ., நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர்.
அதிகாரிகள் கூறுகையில், 'பொதுமக்கள் அனைவரும் ஆன்லைன் வாயிலாகவே, 100 ரூபாய் குடிநீர் கட்டணத்தை செலுத்தலாம். கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை குறித்து புகார் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. 100 நாள் வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கான சம்பளம் என்பது அவர்களின் வேலைத்திறன் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
குழுக்கள் பிரிக்கப்பட்டு, அந்த குழுவின் வேலைத்திறன் அடிப்படையில் தான், சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது' என்றனர்.