/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜாதி பெயர் நீக்க கிராம சபாவில் எதிர்ப்பு
/
ஜாதி பெயர் நீக்க கிராம சபாவில் எதிர்ப்பு
ADDED : அக் 12, 2025 12:39 AM
பொங்கலுார்:திருப்பூர் அருகே நடந்த கிராம சபாவில், ஜாதிப்பெயர் கொண்ட இடங்களின் பெயரை நீக்குவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் அடுத்த காட்டூர் ஊராட்சியில் கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் நேற்று கிராம சபா கூட்டம் நடந்தது.
காட்டூர் ஊராட்சி யில் இடம்பெற்றுள்ள, காட்டூர், காட்டூர்புதுார், சந்தவநாயக்கன்பாளையம், கெங்கநாயக்கன்பாளையம் ஆகிய ஊர்களில் ஜாதிப்பெயரில் காலனிகள் உள்ளன. அவற்றை நீக்க அதிகாரிகள் தீர்மானம் கொண்டு வந்தனர்.
பெயர் நீக்கம் செய்தால் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பத்திரம், பாஸ்போர்ட் என ஒன்று விடாமல் பெயர் திருத்தம் செய்ய வேண்டி வரும். அவற்றை நீக்கக்கூடாது என்று பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டவில்லை.