/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டாசு கொண்டு செல்ல தடை: ரயில் பயணியரிடம் சோதனை
/
பட்டாசு கொண்டு செல்ல தடை: ரயில் பயணியரிடம் சோதனை
ADDED : அக் 16, 2025 05:58 AM

திருப்பூர்: சேலம் ஆர்.பி.எப். டி.எஸ்.பி. செங்கப்பா தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ஹரிகுமார், அனுப்குமார், சுனித், மூன்று எஸ்.ஐ., உட்பட, 35 பேர் அடங்கிய சிறப்பு குழுவினர், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் முதல் மற்றும் இரண்டாவது பிளாட்பார்மில், நேற்று ஆய்வு நடத்தினர். மோப்பநாய் உதவியுடன் பயணிகள் உடைமைகள், பட்டாசுகள் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடந்தது.
ஆர்.பி.எப். இன்ஸ்பெக்டர் ஹரிகுமார் கூறுகையில், ''பயணிகள் எண்ணிக்கை அதிகம் என்பதால், டி.எஸ்.பி. தலைமையில் கண்காணிப்பு தொடர்கிறது. பயணிகள், குடும்பத்தினர், குழந்தைகளுடன் வருபவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். சந்தேக நபர்களிடம் எதுவும் வாங்கி சாப்பிடக் கூடாது. ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள போலீசார், ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்,'' என்றனர்.