/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சத்துணவு சமையலருக்கு தடை: 6 பேருக்கு 2 ஆண்டு சிறை
/
சத்துணவு சமையலருக்கு தடை: 6 பேருக்கு 2 ஆண்டு சிறை
சத்துணவு சமையலருக்கு தடை: 6 பேருக்கு 2 ஆண்டு சிறை
சத்துணவு சமையலருக்கு தடை: 6 பேருக்கு 2 ஆண்டு சிறை
ADDED : நவ 28, 2025 11:31 PM
திருப்பூர்: பட்டியலினத்தை சேர்ந்த சத்துணவு சமையலரை பணி செய்ய விடாமல் தடுத்த விவகாரத்தில், ஒரு பெண் உட்பட ஆறு பேருக்கு தலா 2 ஆண்டு சிறை மற்றும் 15,000 ரூபாய் அபராதம் விதித்து திருப்பூர் கோர்ட் தீர்ப்பளித்தது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், திருமலைக்கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பாப்பாள், 42, என்பவர் சத்துணவு ஊழியராக இருந்தார். பட்டியலினத்தை சேர்ந்த அவர், ஏற்கனவே அருகிலுள்ள கந்தாயிபாளையம் பள்ளியில் வேலை செய்தபோது, ஜாதி பிரச்னை காரணமாக, ஒரு பிரிவினர், அவர் சமையல் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். பல இடங்களுக்கு மாறுதல் செய்யப்பட்டும், அவருக்கு எதிர்ப்பு தொடர்ந்தது.
கடந்த, 2018 ஜூனில் அவர் திருமலைக்கவுண்டம்பாளையம் பள்ளிக்கு சென்றபோது, அவரை வெளியேற்றி, பள்ளி கேட்டையும் ஒரு பிரிவினர் பூட்டி அவரை பணி செய்ய விடாமல் தடுத்தனர். சேவூர் போலீசில் பாப்பாள் அளித்த புகாரின்படி, ஊர் மக்கள் சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கை விசாரித்த, திருப்பூர் எஸ்.சி., - எஸ்.டி., சிறப்பு கோர்ட் நீதிபதி சுரேஷ், திருமலைக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி, 52; சக்திவேல், 53; சண்முகம், 52; வெள்ளியங்கிரி, 53; துரைசாமி, 53; சரஸ்வதி, 48, ஆகிய ஆறு பேருக்கு தலா, 2 ஆண்டு சிறை தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

