/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதிய தம்பதியருக்கு கோவிலில் மரியாதை
/
முதிய தம்பதியருக்கு கோவிலில் மரியாதை
ADDED : நவ 28, 2025 05:44 AM

திருப்பூர்: ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 70 வயது பூர்த்தியான தம்பதியருக்கு விஸ்வேஸ்வரர் கோவிலில் சிறப்பு செய்யப்பட்டது.
தமிழக அரசு அண்மையில், சமய நம்பிக்கை கொண்ட, மூத்த தம்பதியருக்கு ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், கோவில்களில் சிறப்பு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள ஆன்மிக ஈடுபாடு கொண்ட, 70 வயது பூர்த்தியான, 2 ஆயிரம் தம்பதியருக்கு சிறப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அவ்வகையில், திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை ஏழு தம்பதியர் சிறப்பு செய்யப்பட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில், தம்பதியருக்கு புத்தாடை வழங்கி, சிறப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து, விஸ்வேஸ்வர சுவாமி சன்னதியில் அர்ச்சனை செய்யப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

