/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய மல்யுத்த போட்டி; குமுதா பள்ளி மாணவர் தேர்வு
/
தேசிய மல்யுத்த போட்டி; குமுதா பள்ளி மாணவர் தேர்வு
தேசிய மல்யுத்த போட்டி; குமுதா பள்ளி மாணவர் தேர்வு
தேசிய மல்யுத்த போட்டி; குமுதா பள்ளி மாணவர் தேர்வு
ADDED : நவ 28, 2025 05:44 AM

திருப்பூர்: இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய மல்யுத்தப் போட்டிக்கு குமுதா மெட்ரிக் பள்ளி மாணவர் தேர்வு பெற்றார்.
இந்த அமைப்பு சார்பில், 19 வயது - 110 கிலோ எடைப் பிரிவு ஆண்களுக்கான தேசிய மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க தேர்வு போட்டி, ஈரோட்டில் நடைபெற்றது.
இதில் குமுதா மெட்ரிக் பள்ளியின் 10ம் வகுப்பு மாணவர் சுஜிவன், தமிழக அணி சார்பில் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றார். இம்மாதம் 30 முதல் டிச. 4 வரை உ.பி., மாநிலம் கோரக்பூரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணி சார்பில் அவர் பங்கேற்கவுள்ளார்.
தேசியப் போட்டிக்கு தேர்வு பெற்ற சுஜிவனை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம்; துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலாளர் அரவிந்தன், இணை செயலாளர் மாலினி அரவிந்தன்; விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

