/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறிவியல் கண்காட்சியில் கொங்கு பள்ளி அசத்தல்
/
அறிவியல் கண்காட்சியில் கொங்கு பள்ளி அசத்தல்
ADDED : நவ 28, 2025 05:43 AM

திருப்பூர்: பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியில், கொங்கு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் படைப்பு இரண்டாமிடம் பெற்றது.
திருப்பூர் அருகே அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லுாரியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட திருப்பூர் கொங்கு மெட்ரிக் பள்ளி, பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள், ஜெயகார்த்திகேயன் மற்றும் மகேஷ் ஆகியோர் படைப்பு இரண்டாமிடம் பெற்றது. அதற்கான கேடயம் மற்றும் ரொக்கப் பரிசை இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை வழங்கினார்.
கல்லுாரியின் தலைவர் கோவிந்தசாமி, உதவி தலைவர் கருப்பணசாமி, கல்லுாரி முதல்வர் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர். அறிவியல் கண்காட்சியில் பரிசு பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.

