/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை; கோவிலில் பூஜைகள் நடந்தன
/
பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை; கோவிலில் பூஜைகள் நடந்தன
பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை; கோவிலில் பூஜைகள் நடந்தன
பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை; கோவிலில் பூஜைகள் நடந்தன
ADDED : நவ 18, 2024 10:43 PM

உடுமலை ; உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவிக்கு நேற்று பொதுமக்கள் அனுமதிக்கப்படாத நிலையில், கோவிலில் வழக்கமான பூஜைகள், பக்தர்கள் தரிசனம் நடந்தது.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை, சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ளது. மலைமேலுள்ள பஞ்சலிங்கம் சுவாமி கோவில், பஞ்சலிங்கம் அருவி மற்றும் மலையடிவாரத்தில், தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
சுற்றுலா ஸ்தலமாக உள்ள, இங்கு, கோவை, திருப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகின்றனர். இங்குள்ள அருவியில் குளித்து மகிழ்கின்றனர். கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், திருமூர்த்திமலைப்பகுதிகளில், சில நாட்களாக கன மழை பெய்து வருவதால், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி நேற்று, பஞ்சலிங்கம் அருவிக்கு சுற்றுலா பயணியர் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், திருமூர்த்திமலைப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, நேற்று முன்தினம் இரவு, தோணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மலையடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை, காட்டாறு வெள்ளம் சூழ்ந்து ஓடியது.
கோவில் மற்றும் உண்டியல்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நேற்று காலை, காட்டாற்று வெள்ளம் வடிந்ததால், கோவில் வளாகம் துாய்மை செய்யப்பட்டு, நேற்று காலை முதல் வழக்கமான பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.