/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல 4வது நாளாக தடை நீட்டிப்பு
/
பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல 4வது நாளாக தடை நீட்டிப்பு
பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல 4வது நாளாக தடை நீட்டிப்பு
பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல 4வது நாளாக தடை நீட்டிப்பு
ADDED : அக் 23, 2024 10:22 PM

உடுமலை: உடுமலை பஞ்சலிங்கம் அருவியில், 4வது நாளாக நேற்றும் சுற்றுலா பயணியர் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. திருமூர்த்திமலைப்பகுதிகளில், கடந்த, 19ம் தேதி இரவு பெய்த அதி கன மழை காரணமாக, பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தொடர்ந்து, கடந்த நான்கு நாட்களாக அருவியில், நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், பாதுகாப்பு கருதி, 4வது நாளாக நேற்றும் சுற்றுலா பயணியர் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
மலையடிவாரத்தில், தோணியாற்றின் கரையில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு மட்டும், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.