/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில அளவிலான யோகா போட்டி; பண்ணாரி அம்மன் பள்ளி அபாரம்
/
மாநில அளவிலான யோகா போட்டி; பண்ணாரி அம்மன் பள்ளி அபாரம்
மாநில அளவிலான யோகா போட்டி; பண்ணாரி அம்மன் பள்ளி அபாரம்
மாநில அளவிலான யோகா போட்டி; பண்ணாரி அம்மன் பள்ளி அபாரம்
ADDED : செப் 03, 2025 11:41 PM

திருப்பூர்; மாநில அளவிலான யோகாசன போட்டிகள் கடந்த திருமூலர் யோகா ஆராய்ச்சி மையம் வாயிலாக, சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டன.
இப்போட்டியில், 780 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் இயங்கும், பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஆறு பேர் பங்கேற்றனர். 8 முதல் 10 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தனசிவகுரு முதலிடம், 11 முதல் 13 வயதுக்கு உட்பட்ட பிரிவில், அரவிந்தன் இரண்டாம் இடம், 14 முதல் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கிஷோர் இரண்டாமிடம், கவின் மூன்றாமிடம், கவுதம் ஐந்தாமிடம் பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர்.
இவர்கள் தவிர, மாணவர் ஆஷிக், யோகா சன பொதுப்பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்று, 10 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் 'யோகாசன வாகையர்' என்ற பதக்கத்தையும் பெற்றார். மாநில யோகாசன போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.