/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காற்றில் துாக்கி வீசப்படும் பேனர்; மக்களுக்கு விபத்து அபாயம்
/
காற்றில் துாக்கி வீசப்படும் பேனர்; மக்களுக்கு விபத்து அபாயம்
காற்றில் துாக்கி வீசப்படும் பேனர்; மக்களுக்கு விபத்து அபாயம்
காற்றில் துாக்கி வீசப்படும் பேனர்; மக்களுக்கு விபத்து அபாயம்
ADDED : ஜூன் 17, 2025 11:15 PM

பல்லடம்; பல்லடம் பகுதியில் பலத்த காற்று வீசுவதால், பிளக்ஸ் பேனர்கள், தட்டிகள் காற்றி பறந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
நெடுஞ்சாலை மற்றும் பொது இடங்களில் பிளக்ஸ் பேனர் , வைக்கக்கூடாது என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் பல இடங்களில், கட்டுப்பாட்டின்றி வைக்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், பல்லடம் வட்டாரத்தில் பல இடங்களில் பரவலாக வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களும் காற்றில் துாக்கி வீசப்படுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. குறிப்பாக காற்றின் வேகம் அதிகம் உள்ளதால், இதுபோன்ற பிளக்ஸ் பேனர்கள், விளம்பர பலகைகளை தவிர்க்க வேண்டியது அவசியம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.