/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனியன் நிறுவன பஸ் விபத்து: டிரைவர் பலி
/
பனியன் நிறுவன பஸ் விபத்து: டிரைவர் பலி
ADDED : நவ 14, 2024 04:40 AM
அவிநாசி: அவிநாசி அடுத்த நியூ திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் செயல்படும் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தின் பஸ் ஒன்று, வேலை முடிந்து தொழிலாளர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக புறப்பட்டது.
டிரைவர் ஆனந்தகுமாருக்கு, 50, திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டதால் ஆயத்த ஆடை பூங்கா வளாக காம்பவுண்ட் சுவரில் பஸ் நிலை தடுமாறி பலமாக மோதியது. தலையில் படுகாயம் அடைந்த ஆனந்த குமாரை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது, அவர் உயிரிழந்தார்.
இரவு ஷிப்ட் முடிந்து ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஊழியர்கள் 45 பேர் பஸ்சில் பயணித்துள்ளனர்.
அதில் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவருக்கும் அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

