/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனியன் ஊழியர் தற்கொலை; சரணடைந்த தம்பதி கைது
/
பனியன் ஊழியர் தற்கொலை; சரணடைந்த தம்பதி கைது
ADDED : ஆக 07, 2025 11:26 PM
திருப்பூர்; திருப்பூர், வளையங்காடு, வ.உ.சி., நகரை சேர்ந்தவர் தயாளன், 42. திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது. குமார் நகரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் பேப்ரிக் பொறுப்பாளராக பணியாற்றி வந்தார்.
இவர் தான் பணியாற்றிய நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணியை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நிறுவனத் தரப்பில் அனுப்பர்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதையறிந்து, தயாளன் தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மனைவி தரப்பில், நிறுவனத்தினர், கணவனை அடித்து மிரட்டியதாக சொத்துகளை எழுதி வாங்கியதாக புகார் அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்று திரும்பிய தயாளன் சில நாட்களில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்தார். புகாரின் பேரில், தற்கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக பனியன் நிறுவன உரிமையாளர் செல்வமுருகன், 32, மனைவி ரஞ்சிதா, 30 என, இருவரும் திருப்பூர் எஸ்.சி., / எஸ்.டி., கோர்ட்டில் சரணடைந்தனர். இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி சுரேஷ், அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து இருவரையும் அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.