/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிரம்பி வழிந்தது பி.ஏ.பி., வாய்க்கால்: சாலையில் திடீர் வெள்ளப்பெருக்கு

ADDED : மார் 01, 2026 05:54 AM

பல்லடம்: உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து முதல் மண்டல பாசனத்துக்காக, தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பல்லடம் அடுத்த, குங்குமப்பாளையம் பகுதி வழியாக பி.ஏ.பி., கிளை வாய்க்கால் செல்கிறது. குங்குமப்பாளையம், அருள்புரம், தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல நுாறு ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்கள், இந்த கிளை வாய்க்காலின் கட்டுப்பாட்டில் உள்ளன.
நேற்று காலை, கிளை வாய்க்காலின் ஒரு பகுதி நிரம்பி வழிந்து தண்ணீர் வெளியேறியது. ஏறத்தாழ, இரண்டு மணி நேரத்துக்கு மேல் தண்ணீர் வெளியேறி ரோட்டில் வழிந்தோடியது. குங்குமபாளையம் - அருள்புரம் வரை 2 கி.மீ., தூரத்துக்கு தண்ணீர் வழிந்தோடியதால், பல்லடம் - - திருப்பூர் நெடுஞ்சாலை, பி.ஏ.பி., பிரதான வாய்க்கால் போல் காட்சியளித்தது.
வாகன ஓட்டிகள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றனர். ரோட்டோர கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தை தண்ணீர் சூழ்ந்தது. அதிக தண்ணீர் வரத்து மற்றும் குப்பைகள், கழிவுகள் வாய்க்காலில் அடைத்ததன் காரணமாகவும், தண்ணீர் வெளியேறி இருக்கலாம் என, இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கூறினர்.