/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு; திரண்டுவந்த பி.ஏ.பி., விவசாயிகள்
/
குளத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு; திரண்டுவந்த பி.ஏ.பி., விவசாயிகள்
குளத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு; திரண்டுவந்த பி.ஏ.பி., விவசாயிகள்
குளத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு; திரண்டுவந்த பி.ஏ.பி., விவசாயிகள்
ADDED : ஏப் 09, 2025 11:32 PM

திருப்பூர்; உடுமலை அருகே, ஆலாம்பாளையத்தில், 76 ஏக்கர் பரப்பளவில் பூசாரி நாயக்கன் குளம் அமைந்துள்ளது. கடந்த 2012 ல், பி.ஏ.பி., துணை அமைப்பாக பூசாரி நாயக்கன் குளம் சேர்க்கப்பட்டது.
நடப்பாண்டு இரண்டாம் சுற்றாக, திருமூர்த்தி அணை பொது கால்வாய், 1.20 கி.மீ., ல் அமைந்துள்ள மானுப்பட்டி கிளை கால்வாய், 2.65 கி.மீ., ல் அமைந்துள்ள மதகு வழியாக, கடந்த 7ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு 20 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.
பி.ஏ.பி.,ல் மூன்றாம் மண்டல பாசனத்துக்கு, ஐந்து சுற்றுகள் தண்ணீர் திறப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, கடந்த ஜன., 29 ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்னும் இரண்டு சுற்றுகள் கூட முடியாத நிலையில், உடுமலை பூசாரிநாயக்கன் குளத்துக்கு தண்ணீர் திறக்கக்கூடாது எனவும்; சட்டத்துக்கு புறம்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் சங்கங்கள் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றன.
பி.ஏ.பி., பாசன விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்காக, மாவட்டம் முழுவதும் உள்ள பி.ஏ.பி., பாசன சங்கங்களின் பிரதிநிதிகள், 600 பேர், கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.
பி.ஏ.பி., திருமூர்த்தி நீர் தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் தலைமையில், விவசாய சங்க பிரதிநிதிகள் பத்து பேரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பி.ஏ.பி., அதிகாரிகள் பங்கேற்றனர். கலெக்டர் கிறிஸ்துராஜ், விவசாய சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்துக்கு 5 சுற்று தண்ணீர் திறக்கவேண்டியநிலையில், இதுவரை 2 சுற்றுகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பூசாரி நாயக்கன் குளத்துக்கு தண்ணீர் திறந்தால், பி.ஏ.பி., பாசனத்தை நம்பியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். குளத்துக்கு தண்ணீர் திறக்கும் அரசாணையை ரத்து செய்யவேண்டும் என, விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டம் திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக்குழு தலைவர் பரமசிவம் கூறுகையில்,' பி.ஏ.பி. திட்டக்குழு மற்றும் பாசன சபை சங்க தலைவர்களை கலந்து ஆலோசிக்காமல், இனிமேல் மற்ற பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க, கண்காணிப்பு பொறியாளர் அரசாணை பெற பரிந்துரைக்கக் கூடாது. பூசாரிநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் திறப்பு அரசாணையின் காலம் முடிந்து விட்டது. தண்ணீர் திறக்கப்படாது என பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டது,' என்றார். இதையடுத்து, விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.