/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவு பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
/
பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவு பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவு பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவு பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 14, 2025 05:58 AM

உடுமலை : பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனம், மூன்றாம் சுற்றுக்கு நாளை, திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், இரு மாவட்டத்துக்குட்பட்ட ஆயக்கட்டு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி., நான்கு மண்டல பாசனத்துக்கு, சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதில், கோவை, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட, 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்களுக்கு, மூன்றாம் மண்டல பாசனத்தின் கீழ், ஜன., 29ல், தண்ணீர் திறக்கப்பட்டது.
முதல் சுற்று பிப்., 24ல் நிறைவு செய்யப்பட்ட பிறகு, அணையின் நீர்மட்டம் சரிவு மற்றும் சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில் பழுது காரணமாக இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் திறப்பு தாமதமானது.
மார்ச் 13ல், இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, ஏப்., 9ல், சுற்று நிறைவு பெற்றது. இந்நிலையில், ஆயக்கட்டு பகுதியில், கோடை மழை பெய்யாததால், நிலைப்பயிர்களான மக்காச்சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை காப்பாற்றும் வகையில், மூன்றாம் சுற்றுக்கு உடனடியாக தண்ணீர் திறக்க ஆயக்கட்டு விவசாயிகள் அரசை வலியுறுத்தினர்.
இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசுக்கு அனுப்பிய கருத்துரு அடிப்படையில், பி.ஏ.பி., மூன்றாம் மண்டலம், மூன்றாம் சுற்றுக்கு, நாளை, (15ம் தேதி) திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மூன்றாம் மண்டல பாசனத்துக்கு, 5 சுற்றுகள் தண்ணீர் திறக்க ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். அணை நீர் இருப்பை பொறுத்து, அடுத்து சுற்று குறித்து தீர்மானிக்கப்படும்,' என்றனர்.
மூன்றாம் சுற்று தண்ணீர் திறப்பால், கோவை, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட, ஆயக்கட்டு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.