/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வக்கீல் சங்க நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு
/
வக்கீல் சங்க நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு
ADDED : ஜன 01, 2025 05:46 AM
பல்லடம் : பல்லடம் வழக்கறிஞர் சங்கத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில், 34 பேருக்கு மட்டும் சங்க தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமை உள்ளது.
ஆண்டுதோறும், ஓட்டுப்பதிவு முறையில், வழக்கறிஞர் சங்க தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவ்வகையில், 2024--25ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
தலைவராக ஈஸ்வரமூர்த்தி, செயலாளராக கோபாலகிருஷ்ணன், பொருளாளராக மகேஷ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும், துணைத் தலைவர் கோவிந்தராஜ், இணை செயலாளர் மார்ட்டின் தன்ராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக ஈஸ்வரன், தனபாக்கியம், செல்வகுமார் ஆகியோரும் தேர்வாகினர்.

