/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் பேரிகார்டுகள் மாற்றப்ப டுமா?
/
கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் பேரிகார்டுகள் மாற்றப்ப டுமா?
கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் பேரிகார்டுகள் மாற்றப்ப டுமா?
கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் பேரிகார்டுகள் மாற்றப்ப டுமா?
ADDED : மார் 18, 2024 12:34 AM

திருப்பூர்;மாநகரில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, மதுரை, தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து திருப்பூர் வரும் பஸ்கள், கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து இயக்கப்படுகிறது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பஸ் ஸ்டாண்ட் விரிவுபடுத்தி கட்டும் பணி நடந்து வருவதால், பஸ்கள் உள்ளே வந்து செல்வதற்கான வழித்தடம் பிரிக்கப்பட்டு, 'பேரிகார்டு'கள் வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே சேதமடைந்து, உடைந்து, ஓரம் கட்டி வைக்கப்பட்ட பேரிகார்டுகளை கொண்டு வந்து, பஸ் திரும்பும் வளைவு பகுதியில், பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலில் வைத்துள்ளனர். ஒருபுறம் சாய்ந்து, மறுபுறம் உயர்ந்து இவை காணப்படுகின்றன. சில நேரங்களில் காற்றின் வேகத்துக்கு தாக்குபிடிக்காமல் சாய்ந்து விடுகின்றன. பஸ் வரும் போது விழுந்து விட்டால், விபத்து நேர வாய்ப்புள்ளது. உடைந்த 'பேரிகார்டு'களை மாற்றி, புதிய பேரிகார்டு வைக்க வேண்டும் என டிரைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

