/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு புரோக்கர்களிடம் உஷாராக இருக்கணும்! மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

ADDED : ஜன 16, 2025 03:53 AM
திருப்பூர் : திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு ஏராளமானோர் மனு அளிக்கின்றனர்.
மக்களின் அறியா மையை சாதகமாக பயன்படுத்தி சில ஏமாற்றுப் பேர்வழிகள், 'எங்களுக்கு அரசு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. கலெக்டரிடம் மனு கொடுங்கள். அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கித்தருகிறோம்,' என கூறி, பணம் வாங்கிக் கொண்டு, ஏமாற்றி விடுகின்றனர்.
இன்னும் சிலரோ, சமூக ஆர்வலர்கள் போர்வையில், மக்கள் ஏராளமானோரை அழைத்துவந்து, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு மனு அளிக்கச் செய்கின்றனர். வீடு ஒதுக்கீடு செய்யப்படும்போது, 'எங்கள் முயற்சியில்தான் வீடு ஒதுக்கீடு பெறமுடிந்தது' எனக்கூறி, பணத்தை கறந்து விடுகின்றனர்.
இதுபோல், வெவ்வேறு வகைகளில் மோசடிகள் நடந்துவருவதால், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திவருகிறது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், குறைகேட்பு கூட்ட அரங்கிற்கு அருகே,எச்சரிக்கை பேனர் ஒட்டப்பட்டிருந்தது.
அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கித்தருவதாக கூறி மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், எளிதில் மக்கள் பார்வையில் படும்வகையில், கூட்ட அரங்கிற்கு வெளியே போர்டிகோ பகுதி சுவற்றில், விழிப்புணர்வு பேனர் வைத்துள்ளனர்.
'நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் கலெக்டரின் ஒப்புதல் பெறப்பட்டு, முழு பயனாளி பங்களிப்பு தொகை செலுத்துவோருக்கு மட்டுமே குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து மக்கள் ஏமாறவேண்டாம்,' என, அந்த பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது.