/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அழகிய ஆறு... குளித்தால் ஆபத்து :அடுத்தடுத்த நாட்களில் 2 பேர் பலி :60 பேர் உயிர்கள் பறிபோன பரிதாபம்
/
அழகிய ஆறு... குளித்தால் ஆபத்து :அடுத்தடுத்த நாட்களில் 2 பேர் பலி :60 பேர் உயிர்கள் பறிபோன பரிதாபம்
அழகிய ஆறு... குளித்தால் ஆபத்து :அடுத்தடுத்த நாட்களில் 2 பேர் பலி :60 பேர் உயிர்கள் பறிபோன பரிதாபம்
அழகிய ஆறு... குளித்தால் ஆபத்து :அடுத்தடுத்த நாட்களில் 2 பேர் பலி :60 பேர் உயிர்கள் பறிபோன பரிதாபம்
ADDED : அக் 26, 2025 11:36 PM

திருப்பூர்: தாராபுரத்தில் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி, அடுத்தடுத்த நாட்களில் இருவர் பலியாகினர். இதுவரை 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.
அமராவதி ஆறு, உடுமலை அமராவதி அணைப் பகுதியில் துவங்கி, பல்வேறு ஓடைகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு ஆர்ப்பரித்து பாய்கிறது.
தாராபுரத்தை கடந்து செல்லும் இந்த ஆற்றின் குறுக்கில் மதுரை நோக்கிச் செல்லும் பைபாஸ் ரோடும் உயர்மட்டப்பாலமும் அமைந்துள்ளது.இதன் வழியாக வெளி மாவட்டங்களுக்கு கடந்து செல்லும் பயணிகள் ஆற்றைக் கண்டதும், அதன் அழகை ரசித்தவாறே, அங்கு இறங்கி குளிக்கின்றனர். இதற்காக பாறைகள் நிறைந்த பகுதிகளைத்தான் தேர்வு செய்கின்றனர்.
இவை, இடுக்குகள் நிறைந்தும், சுழலும் அமைந்துள்ள ஆழமான இடமாக உள்ளது. நீச்சல் தெரிந்தோர், தெரியாதோர் என இந்த இடத்தில் குளிக்கும் போது ஆபத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.
பெரும்பாலும் கோடை விடுமுறை உள்ளிட்ட விடுமுறை நாட்களின் போது இவ்வழியாகக் கடந்து செல்லும் வெளி மாவட்டத்தினர் இங்கு ஆபத்தில் சிக்குவது வாடிக்கை.நேற்று முன்தினம் ஒரு வாலிபரும், நேற்று இன்னொரு வாலிபரும் இந்த இடத்தில் குளிக்கச் சென்று, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
வெளியூர்களிலிருந்து வருவோர் இங்குள்ள ஆபத்தை அறியாமல் குளிக்கச் சென்று பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இதுவரை கடந்த சில ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்டோர் இங்கு உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
....
தாராபுரம், அமராவதி ஆறு.
தடை விதிக்க வேண்டும்
தாராபுரம், அமராவதி ஆற்றில் குளிப்பது ஆபத்தானது. உள்ளூரைச் சேர்ந்த சிலர், இதில் சிக்கிய நிலையில், சற்று உஷாராகி விட்டனர். இருப்பினும் வழக்கமாக குளிப்பது மற்றும் துணி துவைப்பது போன்றவற்றில் சிலர் ஈடுபடுகின்றனர். சில சமயங்களில் ஆபத்தில் சிக்கியவரை காப்பாற்றச் சென்றவர்களும் இறந்துள்ளனர்.
இங்கு குளிக்க தடை விதிக்கப்பட வேண்டும். போலீசார், பொதுப்பணித்துறையினர் இது குறித்து எச்சரிக்கை அறிவிப்பு வைத்து உரிய கண்காணிப்பும் மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக பொதுப்பணித்துறையினர் இந்த இடத்தில் ஏன் இது போல் உயிர்ப்பலிகள் ஏற்படுகிறது என்ற காரணத்தை கண்டறிந்து, பாறை இடுக்குகளை சீரமைக்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். சமூக வலைதளங்களில் இதுகுறித்து எச்சரிக்கை பதிவுகளையும் சிலர் பகிர்ந்து வருகின்றனர்.

