/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொதுமக்கள் வைத்த அறிவிப்பு பலகை
/
பொதுமக்கள் வைத்த அறிவிப்பு பலகை
ADDED : அக் 26, 2025 11:35 PM

பல்லடம்: பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 8வது வார்டு பச்சா பாளையம் பகுதியில், நகராட்சி எரியூட்டு மயானம் கட்டப்பட்டுள்ளது. இதைப் பராமரிக்கவும், பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கையிலும் நகராட்சி ஈடுபட்டுள்ளது. இதற்காக, ஆத்மா அறக்கட்டளைக்கு அனுமதி வழங்கப்பட்டது. பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட் விசாரணையில், ஆத்மா அறக்கட்டளை எவ்வித பணியும் செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக, பொதுமக்கள் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இன்று, உள்ளாட்சி அமைப்புகளுக்கான சிறப்பு கூட்டம், நகராட்சி அதிகாரிகள் தலைமையில், பச்சாபாளையம் பகுதியில் நடக்கிறது. இதற்கிடையே, பொதுமக்கள் வைத்துள்ள அறிவிப்பு பலகையால் பரபரப்புஏற்பட்டுள்ளது.

