ADDED : ஜன 19, 2026 06:34 AM
உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற பா.ஜ. மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் பேசியதாவது:
தற்போது, 50 சதவீத தேங்காய் விற்பனை இன்று உழவர் உற்பத்தி குழுக்கள் கையில் வந்துள்ளது. விவசாயிகள் வியாபாரிகளாக மாறி இருக்கிறார்கள். விற்பனையாளர்களாக மாறாமல் உற்பத்தியாளர்களாக மட்டுமே விவசாயிகள் இருந்தால் கூலிக்காரர்களாகத்தான் இருக்க வேண்டும். விவசாயிகளிடம் என்ன திறமை இல்லை? விவசாயிகள் தொழில் செய்ய வேண்டும். காய்கறி மற்றும் பூ விற்பனையில் விவசாயிகள் யாரும் இல்லை. நீண்ட நாட்களுக்கு விவசாயிகளாக இருக்காதீர்கள்; வியாபாரிகளாய் மாறுங்கள். மத்திய அரசு முப்பது லட்சம் ரூபாய் வரை விவசாய குழுக்களுக்கு பிணையில்லாமல் கடன் தருகிறது. மாநில அரசு தடையாக இருக்கிறது. கோழி வளர்ப்பு தொழிலில் வருமானம் போதவில்லை என்பது நியாயமானது. ஈசன் முருகசாமி உள்ளிட்டோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

